Tuesday, 2 February 2021

ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்

 ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்ரம்


       ஓம் ஸ்ரீமஹா கணபதயே நமஹ


காஞ்சி கங்கண நூபுர ரத்னகங்கண லஸத் கேயூர ஹாரோஜ்வலாம்

காஷ்மீராருண கஞ்சுகாஞ்சித குசம் கஸ்தூரிகா சர்ச்சிதாம்

கல்ஹாராஞ்சித கல்போக ஜ்வலமுகீம் காருண்ய கல்லோலினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: நாநாவித ரத்னங்களாலான பிரகாசமான கிரீடம், ஹாரம், வளையல், ஒட்டியாணம், கொலுசு ஆகியவற்றை அணிந்து பொலிவுற திகழ்பவளே! 


காஷ்மீரத்தின் குங்குமப்பூ போன்ற சிவந்த கச்சையை அணிந்திருப்பவளே! கஸ்தூரி திலகத்தினால் அலங்காரமான முன் நெற்றியை கொண்டவளே! 


கருணை என்னும் கடல் போன்ற வதனத்தில் மலர்ந்திருக்கும் நீலோத்பலம் போன்ற அழகிய விழிகளை உடையவளே! 


காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கித் துதிக்கிறோம் அம்மா!


காமாரதி மனப்ரியாம் கமலா பூஸேவ்யாம் ரமாராதிதாம்

கந்தர்ப்பாதிக தர்ப்பதன விலஸத் சௌந்தர்ய தீபங்குராம்

கீரலாப விநோதினீம் பகவதீம் காம்ய ப்ரதான வ்ருத்தாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: காமாரியான சிவபெருமானின் மனதிற்கினியவளே! பிரம்மன் மற்றும் இலக்குமியால் துதிக்கப்படுபவளே! பிரகாசமான தீபச்சுடரை போன்ற அழகினால் காதற்கடவுளை பழிப்பவளே! 


கிளிகளுடன் கொஞ்சி விளையாடுவதில் விருப்பம் உடையவளே! வேண்டியதை வரமளிக்கும் தவமாகத் திகழ்பவளே! 


காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


கதம்பப்ரமத விலஸகமனாம் கல்யாண காஞ்சீரவாம்

கல்யாணாசல பதாம்புஜ யுகளாம் காந்த்யாம் ஜ்வலந்தீம் சுபாம்

கல்யாணாசல கார்முகப்ரியதமாம் கதம்ப மாலாஸ்ரயாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: சலங்கைகள் நிரம்பிய கொலுசை அணிந்து ஓசை எழும்ப பெண் அன்னம் போல மென்மையாக நடப்பவளே! 


மேரு மலையினில் கமலம் போன்ற திருவடிகளை கொண்டு பொலிபவளே! ஸ்வயம்பிரகாசம் ஆனவளே! மேரு மலையை வில்லாக வளைத்த மஹேஸ்வரனுக்கு பிரியமானவளே! 


கதம்ப மலர்களாலான மாலையை விரும்பி அணிபவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷீ! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


கந்தர்வாமர சித்த சரணவதூஜீயபதநஞ்சிதாம்

கௌரீம் குங்குமபங்க பங்கபங்கித குசத்வந்தபி ரமாம் சுபாம்

கம்பீரஸ்மித விப்ரமங்கிதமுகீம் கங்காதராலிங்கிதாம்

காம்க்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: தேவ, கந்தர்வ, சித்த, சாரண ஸ்த்ரீக்களால் போற்றப்படுபவளே! பொன் போல மிளிரும் கௌரியே! குங்குமப்பூ கலந்த குங்குமக் குழம்பை பூசிய ஸ்தனங்களை உடையவளே! 


புன்னகை ததும்பும் வதனத்தால் மேலும் அழகாக மிளிர்பவளே! கங்காதரரான சிவபெருமானால் ஆலிங்கனம் செய்யப்படுபவளே! 


காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


விஷ்ணு பிரம்ம அமரேந்த்ர ப்ருஷத் கோடீர பீடஸ்தலாம்

லக்ஷாரஞ்சிதபத பத்மயுகளாம் ரகேந்து பிம்பானனாம்

வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம் வித்வத் ஜனைரவ்ருத்தாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: பிரம்மா விஷ்ணு மற்றும் தேவர்களின் மகுடம் தரித்த சிரசினை தனது ஆசனமாக கொண்டவளே! அரக்கு போன்ற சிவந்த திருவடிக் கமலங்களை உடையவளே! 


முழு நிலவை போன்ற பிரகாசமான வதனத்தை உடையவளே! வேத, ஆகமங்களால் ஆராய்ந்து தேடத் தக்கவளே! ஞானியர் கூட்டத்தால் சூழப்பட்டவளே! 


காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா! 


மாகந்த த்ரும மூலதேச மாணிக்ய சிம்ஹாஸனே

திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா வஸ்த்ரவ்ருதாம் சுபாம்

திவ்ய கல்பித திவ்யதேஹ பரிதாம் த்ருஷ்டி ப்ரோமதர்பிதாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: மாமரத்தின் அடியில் மாணிக்க சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே! பொன்னிற ஆடையை தரித்து தெய்வீகமாகத் திகழ்பவளே! 


சர்வாலங்கார பூஷிதையாக, காணும் அனைவர்க்கும் களிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வீற்றிருப்பவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


ஆதாராதி சமஸ்த சக்ரநிலயாம் ஆத்யந்த சூன்யாம் உமாம்

ஆகாசாதி சமஸ்த பூதநிவஹகராம விசேஷாத்மிகாம்

யோகீந்த்ரைரபி யோகினீ சதகணைராராதிதாம் அம்பிகாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: அனைத்து சக்ரங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீசக்கரத்தில் வாசம் செய்யும் ஆதியந்தமில்லா உமையே! ஆகாயம் முதலான பஞ்சபூத வடிவினளே! 


யோகத்தில் சிறந்த அம்பிகையே! கோடி கணக்கான யோகியர் மற்றும் யோகினி கூட்டங்களால் சேவிக்கப்படுபவளே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


ஹ்ரீம்கார ப்ரணவாத்மிகாம் பிரணமதாம் ஸ்ரீவித்யா வித்யாமயீம்

ஐம் க்லீம் ஸௌம் ருசே மந்த்ரமூர்த்திம் நிவஹா காராம ஸோஷாத்மிகாம்

பிரஹ்மானந்தர சனுபூத மஹிதாம் பிரஹ்மப்ரியாம் வாதினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: ஸ்ரீவித்யாவின் சக்தி பிரணவமாக ஜ்வலிப்பவளே! பக்தர்களின் ஜபத்திற்கேற்ற வடிவில் காட்சி அளிப்பவளே! அனைத்துலக உயிர்களின் ஆன்மாவாக பிரகாசிப்பவளே! 


பிரம்மனால் பூஜிக்கப்படுபவளே! பிரஹ்மானந்தத்தை நல்குபவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


சித்தானந்த ஜனஸ்ய சின்மய சுகாகாராம் மஹாயோகினீம்

மாயா விஸ்வ விமோஹினீம் மதுமதீம் த்யாயேத் சுபாம் ப்ராஹ்மணீம்

த்யேயாம் கின்னர சித்த சாரணவதூ கேயாம் சதா யோகிபீம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்


பொருள்: ஞானிகளுக்கு உனது தெய்வீக வடிவினால் ஆனந்தத்தை அளிப்பவளே! யோகத்தில் சிறந்தவளே! தேனினும் இனிமையானவளே! ஜகம் அனைத்தையும் மோஹிக்கச் செய்பவளே! 


ஞானமாக விளங்குபவளே! சகலருக்கும் மங்களத்தை அருள்பவளே! சித்த, கின்னர, சாரண ஸ்த்ரீக்களால் போற்றப்படுபவளே! அனைவராலும் தியானிக்கத் தக்கவளே! 


காஞ்சிபுரத்தில் வாசம் செய்யும் கற்பகத்தருவே! காமாக்ஷி! உம்மை மனதில் வணங்கி தியானிக்கிறோம் அம்மா!


காமாரி காமாம் கமலாஸநாதாம்

காம்யப்ரதாம் கங்கணபூஷணஹஸ்தாம் 

காஞ்சி நிவாஸம் கனகபிரபாஸாம்

காமாக்ஷி கலயாமி சித்தே


பொருள்: காமனை தகித்த பரமேஸ்வரனின் பத்னியே! செந்தாமரையில் வீற்றிருப்பவளே! பக்தர்களின் மனோ விருப்பங்களை பூர்த்தி செய்பவளே!


நினது திருக்கரங்களில் வளையல்களை அணிந்தவளே! பொன்னிறமாக ஜ்வலிப்பவளே! காஞ்சிபுரத்தில் வாசம் செய்பவளே! காமாக்ஷி! என்றும் எமது சித்தத்தில் நிறைந்து அருள் புரிவாய் அம்மா!


(நிறைவுற்றது)


ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ — with Sathish K. Samy.

No comments:

Post a Comment