அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
ஸ்னேஹாத்ருதாம் விதலிதோத்பல காந்தி சோராம்
ஜேதாரமேவ ஜகதீஶ்வரி ஜேதுகாம: |
மானோத்ததோ மகரகேதுரஸௌ துனீதே
காமாக்ஷி தாவக கடாக்ஷ க்ருபாணவல்லீம் ||31||
- கடாக்ஷ சதகம்.
ஹே ஜகதீஸ்வரி! காமாக்ஷி! தன்மானமுள்ளவனாம் இந்த மன்மதன், தன்னை ஜெயித்தவரனான சிவனை வெல்லும் ஆசையுடையவனாய், ஸ்நேகத்தால் கூராக்கப்பட்டதும், மலர்ந்த நீலோத்பல மலரின் காந்தியை அபஹரிப்பதுமான, உனது கடாக்ஷமாகிற வாளினைச் சுழற்றி வீசுகிறான்.
உலகநாயகியே.....
பல்லவி
உலகநாயகியே காமாக்ஷி தேவி
அழகான காஞ்சியில் புகழாக வாழ்பவளே
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரிபவளே
அன்னையே கேசவன் சோதரிஉமையே
சரணம்
தன்மானமுள்ள மன்தமதன் தன்னை
வென்ற ஈசனை வெல்லும் ஆசையில்
நீலோத்பலமெனும் மலரினும் அழகுடைய
உன் கண்ணை வாளாக்கி எறிந்திட முயல்கிறான்
No comments:
Post a Comment