பத்மநாபனின்....
பல்லவி
பத்மநாபனின் அரவிந்த பதம் தனை
பக்தியுடன் பணிந்தேன — அனந்த
துரிதம்
நிலமகள் அலைமகள் நான்முகன் நாரதர்
மாருதி கருடன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பத்தவதாரம் அவனியிலெடுத்து
உத்தமரைக் காத்து தீயவரை மாய்த்த
சரணம்
வித்தகர் வேத வியாசரும் ப்ருகுவும்
நித்திய சூரிகளும் துதித்திடும் கேசவன் (பத்ம)
முத்தியளித்திடும் புண்ணிய க்ஷேத்திரம்
அனந்தபுரம் தனில் பள்ளிகொண்டிருக்கும் ( பத்ம)
No comments:
Post a Comment