வா வா கேசவா.....
பல்லவி
வா வா கேசவா ஶ்ரீவாசு தேவா
நாவாரத்துதிப்போர்க்கு நலமருளும் மாதவா
அனுபல்லவி
மூவாசைப் பிணிபோக்கும் முன் வினைப் பயன் நீக்கும்
தேவாதி தேவா ரகுவீர ராகவா
சரணம்
நிலையா உலகில் நிலைத்திருக்கும் இறைவா வா
அலைமகளை மணி மார்பில் வைத்திருக்கும் அன்பே வா
சிலை வடிவாய் நின்றெனையே காக்கும் அரசே வா
மலையப்பா திருமலையில் நின்ற கோவிந்தா வா
No comments:
Post a Comment