அழகுக்கு.....
பல்லவி
அழகுக்குப் பொருளாய் விளங்கிடும் ராமனே
கழலடி பணிந்தேன் காத்தருள் புரிவாய்
அனுபல்லவி
சுழலும் சக்கரமும் சங்கும் கையிலேந்தும்
பங்கய நாபனே கேசவனே மாதவனே
சரணம்
நிழலுந்தன் மலரடியே தசரத ராமா
அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் உமையும்
தொழுதேத்தும் திருநாமம் உடையவனே ரகுராமா
பழகு தமிழாலுனைப் பாடிப் பரவசித்தேன்
No comments:
Post a Comment