அன்புடனே.....
பல்லவி
அன்புடனே என்னை ஆதரிக்க வேண்டுமென
அன்னை மரகதாம்பிகையே உனையே வேண்டினேன்
அனுபல்லவி
கன்ம வினைகளால் கடுந்துயர் படுமெனக்கு
இன்னருள் தந்து இனிதாட் கொண்டு
சரணம்
பன்னகபூஷணன் பரிவுடன் தலைசாய்த்து
உன் மடி மீது உறங்கிடும் திருத்தலம்
சுருட்டப் பள்ளியில் கண்டுனைப் பணிந்தேன்
பன்னக சயனன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment