மூலாதார மூர்த்தியே.....
பல்லவி
மூலாதார மூர்த்தியே ஐங்கரனே
சரணம் திருவடி சரணம் அருள்புரிவாய்
துரிதம்
நரர்சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
சுரபதி கேசவன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
நீலாயதாட்சியும் சூலபாணியும்
என் மகன் என் மகன் என்று கொண்டாடும்
சரணம்
மாறி மாறி வரும் இன்பமும் துன்பமும்
வேறல்ல ஒன்றென்று தேறிடும் மனம் வேண்டி
ஆறுமுகன் மூத்தோனே என்றென்றும் உன்னிடம்
மாறாத பக்தியுடன் மனமார வேண்டினேன்
No comments:
Post a Comment