Thursday, 5 September 2019

மத்யமர் 2






சபாஷ் மத்யமர் கவிதை போட்டி ‘பதிவு 2’

பயன் படுத்திய வரி : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை



உயிரோவியம் 


             கவிதை சொல்ல வைக்கும்

            அவள் முகம் கண்டேன்  மனம் களித்தேன்

            நவகவிதையோ யுவகவிதையோ  புதுக் கவிதையோ

            உவகை தரும் அவள் மதி வதனம்

            சிவந்த பட்டுடுத்தி  மங்கலமாய்ப் பொட்டு வைத்து

            அவனியோரனைவரும் கரம் கூப்பித் தொழும் வண்ணம்
           
             தவமுனியும் நோக்கும் மங்கள வடிவம் 

             கவனத்தை ஈர்க்கும்  கருவிழிகள் 

             எவரையும் சற்றே ஏறிட்டு காண வைக்கும் அழகுருவம் 

             இன்னும்  இன்னும்  .......

             நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாயவள்

No comments:

Post a Comment