கதி நீயெனவே.......
பல்லவி
கதி நீயெனவே உனைச் சரணடைந்தேன்
மிதிலாபுரி வளர் சீதையின் நாயகனே
அனுபல்லவி
எதிர் நின்று துதித்திடும் எனைக் காத்தருள்வாய்
கதிரவன் குலத்துதித்த தசரதன் மைந்தனே
சரணம்
ரதிமதனும் மயங்கும் பேரழகுடையவனே
இதிகாச புராணங்கள் சாத்திரங்கள்
போற்றும் இஷ்வாகு குல பெருமைமிகு நிதியே
அருமறைகள் புகழும் புருஷோத்தமனே
புன்னகை தவழும் சந்திர முகத்தோனே
தாமரைக் கண்ணனே தயாள குணத்தோனே
பாமரர் பண்டிதர் சனகாதி முனிவர்கள்
யாவரும் வணங்கிடும் தாமரைப் பாதனே
மேகக் கூட்டமாய்த் திரண்ட அரக்கரை
விரட்டி அழித்திடும் புயலானவனே
தரும நெறி காக்க மானுடனாய் அவதரித்த
பெருமைக்குரிய கோதண்ட ராமனே
No comments:
Post a Comment