ஆராவமுதே......
பல்லவி
ஆராவமுதே அருந்தேனே கேசவா
தீராவினை தீர்க்கும் ஶ்ரீபத்மநாபா
அனுபல்லவி
ஶ்ரீராமா உந்தன் திருவடியே நம்பினேன்
கோரசம்சாரக் கடலினைக் கடந்திட
சரணம்
நாராயணாவன்று சொன்னாலும் போதும்
ஓடோடி வருவான் என்பதெல்லாம் பொய்யோ
ஓராயிரம் நாமம் ஓதித் துதித்த பின்னும்
வாராததேனோ வல்வில் ராமனே
No comments:
Post a Comment