சங்கரனை......
பல்லவி
சங்கரனை அமிர்தகடேச்வரனை
எங்கும் நிறைந்திருக்கும் ஈச்வரனை பணிந்தேன்
துரிதம்
நந்தி கணங்கள் பிரமனிந்திரன்
சந்திரன் சூரியன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
அங்கமில் மன்மதனை எரித்த முக்கண்ணனை
சங்கரி அபிராமவல்லியின் மனங்கவர்
சரணம்
பாலகன் மார்க்கண்டேயனுக்கருளிய
ஆலமுண் நீல கண்டனை சிவனை
காலனை உதைத்த அகோரமூர்த்தியை
சூலபாணியைக் கேசவன் நேசனை
No comments:
Post a Comment