Tuesday, 10 September 2019

பரிசு







                                           பரிசு



                                 பரிசு கிடைக்கணுங்கறத்துக்கா இத எழுதல. ஆனா பரிசு கிடைத்தா
                வேணாங்கல. ஆமா பரிசு கெடைக்காட்டியும் கெடைச்சாலும் எழுதணும்னு தான்
                 தீர்மானத்தோட எழுதினேன். ஒரு விஷயத்த நாலு பேருக்கு தெரியப் படுத்தணும்னு
                 எழுதறது தான் நோக்கம்னா பரிசு கிடைச்சாலும் கிடைக்கலேன்னாலும் சொல்ல
                 வந்தத சொல்லிடணும். அதுதான் சரி நோக்கம்தான் முக்கியம். பரிசு முக்கியமில்ல.
                 அட, ஒண்ணுமே இல்லாத்ததுக்கு மத்தவங்களுக்கு பரிசு கிடைச்சுதேனு பொறாமைப்
                  படக் கூடாது. எத்தனையோ திறமைசாலிகளுக்கு பரிசே கிடைக்கறதில்லை  
                  அதனாலென்ன அவங்களுக்கு திறமையில்லானா சொல்றது. மத்தவங்க அவங்க
                  திறமைய புரிஞ்சுகல இல்ல அதுக்கான திறமை அவங்களுக்கில்ல. இதோ பரிசு      
                  கிடைச்சுதுனு குதிக்கிறாங்களே இவங்களுக்கு புரியுதா இவங்களுக்கு ஏதோ ஒண்ணு
                  ரெண்டு பேர் அவங்களோட தெரிஞ்ச அளவில தேர்ந்தெடுத்து குடுத்திருக்காங்கனு.
                  அட எல்லாமே ஒரு வட்டத்துக்குள்ள நிகழும் மதிப்பீடுதானுங்களே. இதுலேந்து என்ன
                  புரிஞ்சுகணும் பரிசு கிடைக்கறதோ வாங்கறதோ பெரிய விசயமில்ல. எல்லாமே
                  அந்தந்த வட்டத்துக்குள்ளே நிகழற மதிப்பீடு. அட அதுக்காக பரிசு வாங்கின நீங்க
                  சந்தோசப் படாம இருக்கமுடியுமா. படுங்க நல்ல சந்தோசப் படுங்க. ஆனா பரிசு
                  வாங்காத நா ஏன் வருத்தப் படணும். அதுதான் சொல்லவந்தேன். பரிசோ பரிசில்லியோ
                  எல்லோரும் சந்தோசமா இருங்க. , ம்.. புடிச்சிருந்தா சொல்லுங்க மீண்டும்
                  சந்திப்போம் .
                  

No comments:

Post a Comment