மரகதமணிவண்ணனே........
பல்லவி
மரகதமணிவண்ணனே ஶ்ரீ ராமா
பரகதி அருளென உனையே துதித்தேன்
அனுபல்லவி
சுரபதி ரதிபதி சரச்வதியின் பதி
நரர்சுரர் முனிவர்கள் அனைவரும் வணங்கிடும்
சரணம்
அரக்கரின் குல காலா அயோத்தி மாமன்னா
மரவுரி தரித்து கானகம் சென்றவனே
அரனுமை போற்றும் நாமமுடையவனே
நரஜென்மமெடுத்த கேசவனே மாதவனே
குரங்கரசன் தோழனே கோசல ராமனே
பரசுராமரின் வில் வளைத்த வீரனே
மரமறைவில் நின்று வாலியைக் கொன்றவனே
அரவணைப் பள்ளியானே அழகிய ரகுவரனே
அரவணைத்தெனையே காத்திடாமலே
புறந்தள்ளல் தகுமோ பரந்தாமனே
பரமனே உனையன்றி வேறு துணை எனக்கில்லை
அரவிந்த பதம் பணிந்தேன் ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment