உனைக்காண.....
பல்லவி
உனைக் காண வேண்டுமென ஓடோடி வந்தேன்
வட்டாற்றில் பள்ளி கொண்ட ஆதிகேசவா
துரிதம்
நரர்சுரர் நாரதர் பரசுராமனும் இந்திரன்
சந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
எனைக் காக்க வேண்டுமென விண்ணப்பம் செய்தேன்
நினைவிலும் கனவிலும் திருவடி மறவேன்
சரணம்
உண்டதையே உண்டு கண்டதையே கண்டு
மண்ணில் பிறந்த பயன் அறியாமலுழன்றேன்
எண்ணிலா நாட்களை வீணாக க்கழித்தேன்
கண்ணனே உனதருளால் திருந்தி மனம் வருந்தி
No comments:
Post a Comment