கந்தா.......
பல்லவி
கந்தா உந்தன் அருளில்லையாகில்
இந்த ஜென்மம் எடுத்தது வீணே
துரிதம்
நந்தி கணங்கள் சந்திரன் சூரியன்
இந்திரன் நான்முகன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பந்த பாசத் தளைகளில் சிக்கிய
அந்தகன் எந்தனை ஆட்கொண்டு காத்திட
சரணம்
மந்த மதியால் தீவினை புரிந்தேன்
சிந்தை மயங்கி உன் திருவடி மறந்தேன்
எந்தையே இன்று மனம் வருந்தித் திருந்தி
உன் தயை வேண்டினேன் கேசவன் மருகனே
No comments:
Post a Comment