இது உனக்கழகோ......
பல்லவி
இது உனக்கழகோ ஶ்ரீ ரகு ராமா
கதியெனப் பணிந்த என்னைக் காணாதிருப்பது
அனுபல்லவி
மதி முகத்தவனே மாதவனே கேசவனே
துதித்திடும் எனக்கருள உனக்கென்ன தயக்கம்
சரணம்
சதுர் முகன் சதுர் வேதம் சனகாதி முனிவர்கள்
ரதிமதன் சுரபதி பணிந்திடும் பொற்பாதனே
புதுப் பொலிவுடன் திகழ் கோதண்டராமனே
மதுகைடபரை வதைத்த மாவீரனே
மதுர மொழி பேசும் சீதையின் நாயகனே
யதுகுலத்துதித்த மாயக்கண்ணனே
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவனே
கதிரவன் குலத்தோனே கற்பகத் தருவே
No comments:
Post a Comment