உன்னையல்லால்.....
பல்லவி
உன்னையல்லால் வேறு புகலறியேன்
அன்னையே ஶ்ரீ ஏகாம்ப்ரேச்வரி
அனுபல்லவி
பன்னகபூஷணன் ஏகாம்ப்ரேச்வரன்
மனங்கவர் சங்கரி கேசவன் சோதரி
சரணம்
முன் வினையால் யான் பிழைகள் பல புரிந்தேன்
பொன்னையும் பொருளையும் பூவையருறவையும்
இன்னும் பெரிதென எண்ணியே அலைந்தேன்
இன்று மனம் திருந்தி உனைச் சரணடைந்தேன்
No comments:
Post a Comment