சொல்லத்திகட்டாத......
பல்லவி
சொல்லத் திகட்டாத பேரழகுடையவனே
நல்லருள் பெறவே நாளுமுனைத் துதித்தேன்
அனுபல்லவி
அல்லலிடர் களையும் அயோத்தி ராமனே
புல்லும் ஆயுதமாம் வல்லானுன் கைபுகுந்தால்
சரணம்
வல்லரக்கன் ராவணனை வதம் செய்த கேசவனே
கல்லும் காரிகையாகும் உன் காலடி பட்டால்
வில் வளைத்தொடித்து சீதையை மணந்தவனே
நல்லடியார் நலம் பேணும் கோசலராமனே
அல்லும் பகலும் ஓயாது துதித்திடும்
புல்லனெனை காக்க ஏனின்னும் தயக்கம்
சொல்லற்கரியானே தினகரகுலத்தோனே
பொல்லாவினையேன் எனைக்காத்ருள்வாய்
No comments:
Post a Comment