தாமதம்........
பல்லவி
தாமதம் ஏனோ எனக்கருள ஶ்ரீராமா
நாமமே போற்றித் தாளினைப் பணிந்தேன்
அனுபல்லவி
சாம முதல் வேதங்கள் அனைத்தும் போற்றும்
தாமரை நாபனே கேசவனே மாதவனே
சரணம்
ஓமெனும் மந்திரத்தினுட் பொருளாயிருப்பவனே
காமனைப் படைத்தவனே கல்யாண ராமனே
பூமியிலுனக்கிணையாய் வேறொரு தெய்வமில்லை
தாமரைக் கண்ணனே தசரதன் மைந்தனே
ஆமருவியப்பனாய் ஆநிரை மேய்த்தவனே
கோமகள் சீதையின் மனங்கவர் அழகனே
தாமரைக் கண்ணனே கோசலபலனே
நாமங்கள் ஆயிரம் உடைய நாராயணனே
சோமசுந்தரரும் பார்வதியும் போற்றும்
நாமமுடையவனே நரர் சுரர் பணிபவனே
தாமரையின் நண்பன் சூரியனின் குலத்துதித்த
கோமகனே அயோத்தி மாநகர் மன்னனே
காமக்ரோதாதி அறுபகையகலவுன்
நாமமே துணையென நம்பி வணங்கினேன்
மாமன் கம்சனை வதைத்த மாயவனே
தேமதுரத் தமிழில் துதிபாடியுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment