பட்டாபிராமனே......
பல்லவி
பட்டாபி ராமனே உன் பாதம் பணிந்தேன்
எட்டெழுத்து நாயகனே எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
மட்டவிழ் மலர்தூவி மனமாரத் துதித்து
இட்டமுடன் வெற்றிலையும் பாக்கும் பழமும் வைத்து
சரணம்
சுட்டெரிக்கும் சூரிய குலத்துதித்த கேசவனே
வட்ட நிலவை ஒத்த முகவடிவுடையவனே
துட்ட அரக்கர்களின் கொட்டம்தனை அழித்தவனே
பட்ட துயர் விலகிடவும் பழவினைகள் தொலைந்திடவும்
No comments:
Post a Comment