சபாஷ் மத்யமர் கவிதைப் போட்டி - பதிவு 3
பயன் படுத்திய வரி “வீழ்வேனென்று நினைத்தாயோ”
********
ஏழ்மையில் நானுழன்றாலும்
தாழ்வுற்று வறுமையில் வாடி நின்றாலும்
வாழ்வின் கடைநிலையில் கிடந்தாலும்
ஏழேழ் பிறப்பிலும் துன்பத்தில் கிடந்தாலும்
பாழ் நரக க்குழியில் வீழென்று சொன்னாலும்
ஊழ் வினையால் இன்னல்கள் அடைந்தாலும்
“வீழ்வேனென்று நினைத்தாயோ” கண்ணா
ஆழ் கடல் கடைந்து அமுதெடுத்து அமரருக்களித்தவனே
வாழ்விக்க உனது திருவடியே போதும்
சூழ்நிலைகள் உனதருளால் மாறும்
தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் கொண்ட நீயே எந்தன் துணை
No comments:
Post a Comment