கந்த மாதா.....
பல்லவி
கந்த மாதா உந்தன் பாதமே
சந்ததம் துதித்தேன் எந்தனுக்கருள்வாய்
அனுபல்லவி
சுந்தர வடிவுடைய ஈசன் துணைவியே
மந்திர மேரு மலைதனில் வசிப்பவளே
சரணம்
இந்திரன் நரர்சுரர் நான்முகன் நாரதர்
கந்தன் கணபதி அலைமகள் கலைமகள்
சந்திரன் சூரியன் நந்தி கணங்கள்
வந்தனை புரிந்திடும் கேசவன் சோதரி
அந்தமுமாதியும் இல்லாத தேவியே
பந்த பாசத் தளைகளைக் களைபவளே
சுந்தரி சிந்துர வண்ணத்தினளே
சந்திப்பவர்க் கெளிய அம்புய பதத்தாளே
No comments:
Post a Comment