ஶ்ரீமகா திரிபுரசுந்தரி.....
பல்லவி
ஶ்ரீமகா திரிபுரசுந்தரி உந்தன்
தாமரை மலர்ப் பதம் மனமாரப் பணிந்தேன்
துரிதம்
நாரணன் நான்முகன் நமச்சிவாயனும்
நரர்சுரரிந்திரன் அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
மாமேரு தனிலமர்ந்து புவியனைத்தும் காக்கும்
ஆதிபராசக்தி கேசவன் சோதரி
சரணம்
அலைமகள் கலைமகள் மலைமகள் போற்றும்
தலைமகளே தாயே அகிலாண்டேஸ்வரி
மலைபோல் வருந்துயர் பனிபோல் நீங்கிடவும்
நிலையான பேரின்பம் அடைந்திடவும் வேண்டியே
No comments:
Post a Comment