வாராய் ஶ்ரீராமா........
பல்லவி
வாராய் ஶ்ரீ ராமா வந்தருள் தந்தருள்
பாரோர் பணிந்தேத்தும் பானு குலத்தோனே
அனுபல்லவி
ஆராதனை செய்து அனுதினமுனைப் பணிந்தேன்
கார் வண்ணமேனியனே கமலக் கண்ணனே
சரணம்
மார்பணியாய் திருமகளை வைத்திருக்கும் கேசவனே
சீர் மல்கும் அயோத்தி மாநகர மன்னவனே
சாரங்கபாணியாய் குடந்தையில் கிடந்திடும்
ஆராவமுதனே அழகிய ரகுவரனே
பேராயிரமுடைய பேரழகனே
தீரா வினைப் பயன்களனைத்தும் தொலைந்திடவும்
கோரசம்சாரக் கடலினைக் கடந்திடவும்
நாராயணனே நீயே என் துணை
No comments:
Post a Comment