சங்கரி புதல்வனை.....
பல்லவி
சங்கரி புதல்வனை ஐங்கரனைப் பணிந்தேன்
பொங்கும் மூவாசைப் பிணிதனைக் களைந்திட
துரிதம்
திங்கள் நான்முகன் நந்தி கணங்கள்
நரர்சுரரனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஓங்கார வடிவினனை
பங்கய நாபன் கேசவன் மருகனை
சரணம்
அழகு தமிழ் மொழியில் குழந்தைக் கடவுளென
அழைத்து மகிழ்ந்திடும் அடியாரைக் காத்திடும்
வேழமுகத்தோனை வினை தீர்ப்பவனை
ஊழ்வினைப் பயன் களையும் விக்ன வினாயகனை
No comments:
Post a Comment