சித்தம்.......
பல்லவி
சித்தம் இரங்காதோ சென்ன கேசவா
நித்தமுமுனைத்துதிக்கும் அடிமையெனக்கருள
அனுபல்லவி
எத்தனையோ முறை உன்னையழைத்தேனே
அத்தனையுமுன் காதில் விழவில்லையா இன்னும்
சரணம்
உற்றமும் சுற்றமும் சதமல்லவென்றே
பற்றறுத்து உந்தன் திருவடி பற்றினேன்
சற்றே மனங்கனிந்து ஆட்கொள்ள வேண்டுமென
உத்தமனே மீண்டும் உன் கருணை வேண்டினேன்
No comments:
Post a Comment