ஆனந்தவல்லியுன்.....
பல்லவி
ஆனந்தவல்லியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
ஏனிந்தப் பாராமுகம் ஏழையெனக்கருள
அனுபல்லவி
ஆனந்த நடமிடும் கைலாசநாதருடன்
ஆனந்தமாயகர மாங்குடியில் காட்சி தரும்
சரணம்
கூனல் பிறையணிந்த அன்னையே ஈச்வரி
தேனுந்தன் திருநாமம் நாவார உரைப்பவர்க்கு
வானுறை தேவரும் யாவரும் துதித்திடும
தானந்தமில்லாத கேசவன் சோதரி
ஊனம் களைந்து என் மன இருள் நீங்கவே
கானமியற்றியுன் நாமமே போற்றினேன்
மோனத்தவம் செய்யும் முனிவரும் வணங்கிடும்
தீன தயாகரி அகிலாண்டேஸ்வரி
No comments:
Post a Comment