ஶ்ரீ கணபதியுன்....
பல்லவி
ஶ்ரீ கணபதியுன் திருவடி பணிந்தேன்
நீ கதியெனவே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
பாகம் பிரியாள் உமையவள் மைந்தனே
ஆகம வேத புராணங்கள் போற்றும்
சரணம்
நாகம் தனை இடையிலணிந்த சுமுகனே
நாகத்தணையான் கேசவன் மருகனே
ஏகதந்தனே மோதகப்பிரியனே
வேகமே வந்தனை காத்தருள் வாயென
No comments:
Post a Comment