நீயே துணை....
பல்லவி
நீயே துணை ஶ்ரீ லலிதாம்பிகையே
தாயே யெனக்கருள தருணமிதுவே
அனுபல்லவி
நேயமுடன் திருமகளும் கலைமகளும் போற்றும்
மாயே மரகதமே கேசவன் சோதரி
சரணம்
ஆயிரம் நாமங்கள் உரைத்திடுமடியார்ககு
ஓயாதுனதருளை வாரி வழங்கிடும்
தூயவளே துயர் துடைப்பவளே தேவி
மீயச்சூர் திருத்தலத்தில் பெருமையுடன் வீற்றிருக்கும்
No comments:
Post a Comment