கமல மலர்ப்பதம்......
பல்லவி
கமல மலர்ப் பதம் பணிந்தேன் தாயே
குமரனெனக்குன் அருள் தருவாயே
அனுபல்லவி
உமையொருபாகன் இடம மர்ந்தவளே
கமலாம்பிகையே கருணைக் கடலே
சரணம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
கமலாலயனும் அடிபணிந்தேத்தும்
உமா மகேச்வரி கேசவன் சோதரி
சமமுனக்கொருவரும் இல்லாத ஈச்வரி
No comments:
Post a Comment