Tuesday, 15 October 2019

அம்பிகையே

#அம்பாளை_ஆராதனை #பண்ணினா

#என்ன_கிட்டும்_னு_கேட்டா

அது மழைனால லோகத்துல என்ன எல்லாம் விளையும்?னு கேக்கர்த்துக்கு சமானம்.

அந்த மாதுளம்பூ நிறத்தாளை மனம் உருகி துதிப்பவர் கண்களில் ஒரு ஒளி இருக்கும், காளிதாஸனை ஒத்த கற்பனை வளம் இருக்கும், எப்போதும் மாறாத குழந்தை மனம் இருக்கும், லோகம் முழுசையும் தன்னோட சொந்தபந்தமா பாவிக்கக் கூடிய தாயுள்ளம் இருக்கும், தேர்ந்தெடுத்து கிட்டிய ரத்தினம் போன்ற நட்புவட்டம் இருக்கும்,

இந்த்ராபுரியின் அரசனையும் இல்வாழ்க்கையில் இருக்கும் சாமானியனையும் சமமாக பாவிக்கும் நடு நிலையான மனசு இருக்கும், இன்னும் சொல்ல முடியாத எல்லா கீர்த்தியும் செல்வமும் அவன் காலடியில் தவம் இருக்கும்.

அவளை ஆராதிப்பதோ எவ்வளவு எளிது என்பதை பாருங்கள்!

ந ஜானாமி தானம் த சத்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம் |
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||

அம்மாடி பவானி! நேக்கு தானம் பண்ணவும் தெரியாது, யோகம் பண்ணவும் தெரியாது, மந்த்ரம் ஸ்தோத்ரம்னு எதுவுமே தெரியாது. உருப்படியா ஒரு பூஜை கூட பண்ண தெரியாதுன்னா பாத்துக்கோயேன். நேக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும்தான். நீயே கதி! என்பதே போதுமானது!

அம்பிகே சரணம்!! சரணம்!!
Text courtesy: Vijayalakshmi Chidhambaram



                           அம்பிகையே....


                                                                   பல்லவி


                                                    அம்பிகையே உன் பாத கமலமே
                                                    நம்பினேனல்லாது வேறொன்றறியேன்

                                                                 அனுபல்லவி

                                                   அம்புலி பிறையணிந்த கேசவன் சோதரி
                                                   உம்பர் முனிவர் பணி அகிலாண்டேஸ்வரி

                                                                      சரணம்
                                                 
                                                   தானமும் தவமும் தலயாத்திரையும்
                                                   மந்திர தந்திர வேத சாத்திரங்கள்
                                                   எதுவும் அறியாத உனதடிமை யான்
                                                   கதி நீயேயென்று உனைச்சரணடைந்தேன்


                                                 
   
                    

No comments:

Post a Comment