சீதாபதி.......
பல்லவி
சீதாபதி என்றும் நீயே கதி
பாதாரவிந்தம் பணிந்தேன் எனக்கருள்வாய்
அனுபல்லவி
மாதா ஜானகியின் மனங்கவர் தாசரதி
வேதாகம சாஸ்த்திர புராணங்கள் போற்றும்
சரணம்
பாதுகை தந்து பரதனுக்கருள் புரிந்தாய்
மாது சபரியின் மனம் குளிரச் செய்தாய்
ஆதவ குலத்துதித்து அரக்கரை வதம் செய்தாய்
பூதலம் போற்றும் மாதவனே கேசவனே
No comments:
Post a Comment