பல்லவி
ஓங்காரமாய் விளங்கும் மகா கணபதியை
சாங்கியங்கள் செய்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தேங்காய் வெற்றிலை பாக்கு பழமும் படைத்து
தீங்கின்றி யவன் நாமம் நாவார உரைத்து
சரணம்
நீங்காதெப்போதும் உடனிருக்கும் திருமகளை
தாங்கும் திருமார்பன் கேசவன் மருகனை
ஓங்கு புகழ் கணபதி அக்கிரகாரம் தனில்
பாங்குடனே வீற்றிருந்து பக்தருக்கு காட்சிதரும்
No comments:
Post a Comment