நஞ்சுண்ட சுவாமி
பல்லவி
வண்ணமயமானே தேரேறி பவனி வரும்
நஞ்சுண்ட கண்டனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தண்மதி முகத்தாள் தேவகிரி மனங்கவர்
கண்மூன்றுடையானை மகாதேவனை
சரணம்
புண்ணியம் செய்தோருக்கு கண்ணெதிரில் காட்சிதரும்
புண்ணியனைப் புனிதனைக் கேசவன் நேசனை
கண்கவர் அழகனை தேவாதி தேவனை
விண்ணோரும் மண்ணோரும் பணிந்திடும் ஈசனை
No comments:
Post a Comment