Monday, 12 May 2014

பஞ்சமுக கணபதி (ஏற்காடு )

.

பஞ்சமுக கணபதி (ஏற்காடு )

பல்லவி 

அஞ்சுமுக கணபதியை ஆனைமுகத்தோனை 

தஞ்சமடைந்தேன் தயைபுரிவாயென 

அனுபல்லவி 

கஞ்சனைக்காய்ந்த கேசவன் மருகனை 

நஞ்சுண்ட கண்டன் பரமசிவன் மகனை 

சரணம் 

நஞ்சரவு தன்னை இடையிலணிந்தவனை 

அஞ்சுகரத்தானை அரவிந்த பதத்தானை 

நெஞ்சாரத்துதித்திடும் அடியார்க்கருள்பவனை 

குஞ்சரமுகனை குகசோதரனை 














No comments:

Post a Comment