கோவிந்தன்
பல்லவி
கோவிந்தா கோவிந்தா என்றழைத்தேனே
குரல் கேட்டு ஓடிவர மனமில்லையா
அனுபல்லவி
தேவியரிருவரும் மேவிடும் கேசவனே
மூவடியாலுலகளந்த வாமனனே மாதவனே
சரணம்
கூவியழைத்தக் கரிக்கபயம் தந்தவனே
காவல் தந்தபலை மானம் காத்தவனே
சேவடி பணிந்து தினமுனைத் தொழுதிடும்
பாவியேன் என்மீது பாராமுகம் ஏனோ
No comments:
Post a Comment