கரிமுகன்
பல்லவி
கரிமுகனை கணபதியை மனமாரத்துதித்தேன்
பரிவுடன் எனையே காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
விரிகமலமலரமர் பிரமனும் அமரரும்
அரி அரனும் நந்தியும் கணங்களும் வணங்கிடும்
சரணம்
பரிதியின் ஒளியினும் ஒளிமிகு சுமுகனை
திரிபுரமெரித்த பரமசிவன் மகனை
கரியநிறத்தினன் கேசவன் மருகனை
சரிநிகர் சமானமில்லாத தேவனை
No comments:
Post a Comment