சதுர்புஜன்
பல்லவி
சதுர்மறை போற்றும் சதுர்புஜனை
மதுர மோதகப் பிரியனைத்துதித்தேன்
அனுபல்லவி
பதுமநாபன் கேசவன் மருகனை
புதுமைகள் நிறைந்த கற்பகக் களிரை
சரணம்
புதிதாயெதையும் தொடங்கும் முன்னனைவரும்
முதன்முதல் வணங்கிடும் முழுமுதற்கடவுளை
மதியும் மத்தமும் வைத்திருக்கும் கரிமுகனை
குதூகலம் தரும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment