நெற்றிக் கண்ணன் மகன்
பல்லவி
அனைத்துமாகிய ஆனைமுகத்தோனை
வினைதீர்ப்பவனை மனமாரத் துதித்தேன்
துரிதம்
கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும்
நரர்சுரரும் நான்முகனும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
தினகர குலத்தோன் கேசவன் மருகனை
அனலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனை
சரணம்
தனக்கொரு நிகரிலாத் தனிப்பெருந்தேவனை
முனைப்புடன் துதித்திடும் பக்தருக்கெல்லாம்
கனிவுடன் அருள் தரும் வேழமுகத்தோனை
எனைக்காத்தருளவே கழலடி பணிந்து
At an art shop in Kodaikanal
No comments:
Post a Comment