சித்தி விநாயகன்
பல்லவி
சித்தியும் புத்தியும் உடனிருக்கும் கணபதியை
தத்துவப் பொருளை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
மத்தள வயிறனைக் கேசவன் மருகனை
புத்தியில் வைத்து கற்றவர் போற்றும்
சரணம்
தித்திக்கும் மோதகப்பிரியனை கரிமுகனை
முத்தியளித்திடும் முழுமுதற்கடவுளை
பித்தன் சிவன் மகனை குஞ்சர முகனை
எத்திசையும் புகழ் விளங்கும் வேழமுகத்தோனை
No comments:
Post a Comment