பயணம்
ஃ
பாதை செல்லும் திசையில் நானும்
பயணம் செய்யப் பழகிவிட்டேன்
அழகிய நீண்ட அகன்ற சாலை
இருபுறம் பசுமை எங்கும் மரங்கள்
காணும் காட்சி கண்ணின் விருந்து
எல்லா வழியும் இது போலில்லை
கரடு முரடு மேடு பள்ளம்
காய்ந்த வயல்கள் எங்கும் வறட்சி
மழை நீரின்றித் தண்ணீர் பஞ்சம்
நெய்தல் பாலை மருதம் முல்லை
குறிஞ்சி என்று பலவகை நிலங்கள்
சோலைகள் காடுகள் நகர்ப்புறங்கள்
கடந்திடும் வழியில் பலவித மக்கள்
உறவுகள் நண்பர்கள் தொடர்புகள் என்று
அவ்வப்போது வந்து சென்றாலும்
நினைவில் நீங்கா மனிதர் சிலரே
உடன்வருவது எவரும் இல்லை
நினைவுமட்டுமே இறுதிவரையில்
பயணம் மட்டும் தெரிந்து தொடர்ந்தேன்
தொடங்கியதெப்போ முடிவது எப்போ !
அறிந்தவர் சொன்னால் புரிந்து நடப்பேன் !!
No comments:
Post a Comment