Sunday, 11 May 2014

கம் கணபதி


கம் கணபதி 

பல்லவி 

சங்கரி புதல்வனை கம் கணபதியை 

மங்கள மூர்த்தியை  மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

பங்கயநாபன் கேசவன் மருகனை 

குங்குமமணிந்த குஞ்சரமுகனை 

சரணம் 

அங்குசம் பாசம் கரங்களில் ஏந்திடும்  

திங்கள் கலையணிந்த மோதகக்கையனை

பங்கய பதத்தானை துங்கக்கரிமுகனை  

மங்காதபுகழ் மேவும் மணித்வீப கணபதியை 




















No comments:

Post a Comment