பல்லவி
ஆடும் கணபதியை மனமாரத்துதித்தேன்
ஆடல் பாடல் கலைகளை ரசித்திடும்
அனுபல்லவி
மாடுகள் மேய்த்திடும் கேசவன் மருகனை
வீடுபேரளிக்க வல்ல ஆனைமுகத்தோனை
சரணம்
ஈடும் இணையும் தனக்கில்லாதவனை
நாடும் அடியார்க்கு நலம்பல அளிப்பவனை
தோடுடைய செவியன் ஈசன் சிவன் மகனை
பாடிப்பரவி தாளினைப் பணிந்து
No comments:
Post a Comment