Tuesday, 27 May 2014

திருமணஞ்சேரி சிவன்





திருமணஞ்சேரி சிவன்

பல்லவி

கயிலை நாதனை கல்யாண சுந்தரனை

மயிலாடும் மணஞ்சேரி ப்பதிதன்னில் துதித்தேன்

 அனுபல்லவி

 குயிலின் குரலுடைய யாழினும் மென்மொழியாள்

 ஒயிலாக ஒருபாகம் உடனிருந்து போற்றும்

 சரணம்

 அயிலாரும் அம்பெறிந்து முப்புரமெரித்தவனை

 துயிலும் பாற்கடலோன் கேசவன் நேசனை

 சயிலேந்திரன் மகளை மணம் செய்த ஈசனை

 பயில்வோருக்கு பவபயம் பாவங்களில்லை






No comments:

Post a Comment