Tuesday, 13 May 2014

குஞ்சரமுகன்


  குஞ்சரமுகன்

         பல்லவி

குஞ்சரமுகனை சங்கரி மைந்தனை

நெஞ்சாரத் துதித்தேன் காத்தருள் வாயென

          அனுபல்லவி

அஞ்சுகரத்தானை ஆனைமுகத்தானை

நஞ்சரவணை துஞ்சும்  கேசவன் மருகனை

                சரணம்

வெஞ்சமரில் கஜமுக அரக்கனை வென்றவனை

குஞ்சரி மணாளன் குகசோதரனை

வெஞ்சுடரோனொளியை மிஞ்சுமொளியுடையவனை

தஞ்சமடைந்தவர்க்கு தயவளிக்கும் கரிமுகனை




             

No comments:

Post a Comment