.
மூகாம்பிகை
பல்லவி
மூகாம்பிகையே தாயே சரணம்
மாகாளியே உந்தன் மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
நாகாபரணனும் தேவரும் முனிவரும்
நான்முகனுமிந்திரனும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
ஏகாந்த சிந்தையும் வேதாந்த ஞானமும்
எனக்கருள வேண்டுமென உனையே துதித்தேன்
ஸ்ரீகாந்தன் கேசவன் சோதரியே மாயே
ஏகாம்ரே ச்வரியே காத்தருள்வாயே
No comments:
Post a Comment