Friday, 9 May 2014

எனக்கும் ஆசை கவிதை எழுத





எனக்கும் ஆசை கவிதை எழுத(பாகம் 1)

ஃ  

எதுகை மோனை நடை இலக்கணம் 

எழுவாய் பயனிலை  செயப்படு பொருளென 

மொழியின் வழியும் வல்லினம் மெல்லினம் 

சொல்லும் சொல்லின் பொருளும் 

உருவகம் உவமை அங்கதம் யாப்பு 

எதுவுமறியா தற்குறியான 

எனக்கும் ஆசை கவிதை எழுத 

*
கையில் கணினி இருப்பதனாலே 

மையும் எழது கோலும் வேண்டாம் 

தமிழ் மொழி தாய் மொழி என்பதனாலே 

வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை 

நிலவு காதல் சேர்த்தல் பிரிதல் 

கலவி காமம் மயக்கம் சோகம் 

பலதும் பலரும் பாடியதாலே 

பாடும் பொருளைத் தேடித்திரிந்தேன் 

தேடும் முயற்சி முடிந்தவுடனே 

எனக்கும் ஆசை கவிதை எழுத

{தொடரும் }





No comments:

Post a Comment