கற்பக விநாயகன்
பல்லவி
கற்பனைக் கெட்டாத கற்பகக் களிறை
தற்பரன் மகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பற்பநாபன் கேசவன் மருகனை
அற்புதலீலைகள் புரிந்த கரிமுகனை
சரணம்
பொற்பதம் பணிந்திடும் பக்தருக்கெல்லாம்
நற்கதி யளித்திடும் ஆனை முகத்தோனை
முற்பிறப்பில் செய்த வினைப்பயன்களை
அற்பமாய் செய்து ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment