ஆலவாயழகன்
பல்லவி
சங்கரனை ஈச்வரனை ஆலவாயழகனை
பொங்கரவணிந்தவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
அங்கையற் கண்ணியின் மனம் மகிழச்செய்திடும்
திங்கள் பிறையணிந்த சொக்கநாதனை
சரணம்
முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட
எங்களுக்குதவிடும் கேசவன் நேசனை
எங்கும் நிறைந்திருக்கும் மகாதேவனை
மங்காதபுகழ் மேவும் மதுரைமாநகர் வளர்
No comments:
Post a Comment