Saturday, 31 May 2014

நெற்றிக் கண்ணன் மகன்






நெற்றிக் கண்ணன்  மகன்

பல்லவி

அனைத்துமாகிய ஆனைமுகத்தோனை

வினைதீர்ப்பவனை  மனமாரத் துதித்தேன்

துரிதம் 

 கணங்களும் நந்தியும் தேவரும் முனிவரும் 

 நரர்சுரரும் நான்முகனும் கரம் பணிந்தேத்தும் 

அனுபல்லவி

தினகர குலத்தோன்  கேசவன் மருகனை

அனலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனை

சரணம்

தனக்கொரு நிகரிலாத் தனிப்பெருந்தேவனை

முனைப்புடன் துதித்திடும் பக்தருக்கெல்லாம்

கனிவுடன் அருள் தரும் வேழமுகத்தோனை

எனைக்காத்தருளவே  கழலடி  பணிந்து

At an art shop in Kodaikanal

Friday, 30 May 2014

கற்பக விநாயகன்



கற்பக விநாயகன்

பல்லவி

கற்பனைக் கெட்டாத கற்பகக் களிறை

தற்பரன் மகனை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

பற்பநாபன் கேசவன் மருகனை

அற்புதலீலைகள்  புரிந்த கரிமுகனை

சரணம்

பொற்பதம் பணிந்திடும் பக்தருக்கெல்லாம்

நற்கதி யளித்திடும்  ஆனை முகத்தோனை

முற்பிறப்பில் செய்த வினைப்பயன்களை

அற்பமாய் செய்து ஆண்டருள வேண்டுமென 


மனம் மகிழச்செய்யும்  மலர்கள்
தினம் பார்த்தாலும் அலுப்பதில்லை

அனைவரும் விரும்பும் இதற்கு
இனம் மதம்  மொழி வேறுபாடில்லை

வநிதையரழகைக்  கூடச்செய்யும்
புனிதரின் பதமலர் இனிது சேரும்



Thursday, 29 May 2014

ஆடும் கணபதி








ஆடும் கணபதி


ஆடும் கணபதி 

பல்லவி 

ஆடும் கணபதியை மனமாரத்துதித்தேன் 

ஆடல் பாடல் கலைகளை ரசித்திடும் 

அனுபல்லவி 

மாடுகள் மேய்த்திடும் கேசவன் மருகனை 

வீடுபேரளிக்க வல்ல ஆனைமுகத்தோனை 

சரணம் 

ஈடும் இணையும் தனக்கில்லாதவனை 

நாடும்  அடியார்க்கு நலம்பல அளிப்பவனை 

தோடுடைய செவியன் ஈசன் சிவன் மகனை 

பாடிப்பரவி  தாளினைப் பணிந்து 

Wednesday, 28 May 2014

வெள்ளி விநாயகன்



வெள்ளி  விநாயகன்

பல்லவி

வெள்ளிக்கவசமணிந்த விநாயகனை

பிள்ளையாரப்பனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

உள்ளன்புடன் துதிக்கும் நல்லடியார்க்கு

 வெள்ளமெனக் கருணை பொழிந்திடும் கரிமுகனை

சரணம்

 தெள்ளத்தெளிவான ஞானமும் கல்வியும்

அள்ளியளித்திடும் ஆனைமுகத்தோனை

புள்ளி மயில்வாகனன் சோதரனை சுமுகனை

பள்ளிகொண்ட பாற்கடலோன் கேசவன் மருகனை 


வெள்ளை கணபதியாய் வலஞ்சுழியில் விற்றிருக்கும்

தெள்ளியனை ஐங்கரனை தீனசரண்யனை

 கொள்ளிக் கண்ணன் மகனை தேவாதி தேவனை

வள்ளலாய் வரம் தரும் வாரணமுகனை





















மெழுகு பொம்மை






மெழுகு பொம்மை

அழகு முகம்
குழல்கற்றை விழும் நுதல்
அழல் நிறத் திலகம்
விழியிரண்டும் வேல்
பழுத்த மதுளைச்செவ்வாய்
கழுத்து சங்கு
வழுக்கும் மார்பில்
கொழுத்த மலையென முலை
முழுதும் உலர்ந்த திராட்சைக் காம்பு
நழுவத்துடிக்கும் ஆடையையை
இழுத்து பிடிக்க முயலும் கொடியிடை
எழுத்தில் சொல்லமுடியாத யோனி
வழு வழுப்பான வாழைத் தண்டுத் தொடைகள்
வேழத்தின் துதிக்கையொத்த கால்கள்
அழகிய தாமரைப் பாதம்
தழுவத் துடிக்கும் தறி கெட்டொடும் மனம்
ஓ பெண்ணே
மெழுகு பொம்மையாய்  நிற்கிறாய்  என்செய்வேன் !!



நிறைவு


நிறைவு

 ஃ
 கறையிருக்கும் பிறைநிலவின் ஒளி

  மறைவில் முறை மாமன்

  உறவின்   நிறைவில்

   பிறவிப்பயனடைந்த உணர்வில்

    நான்;

    இறைவனுக்கு

    நன்றி  சொல்லத் துடித்தேன்

 


Tuesday, 27 May 2014

திருமணஞ்சேரி சிவன்





திருமணஞ்சேரி சிவன்

பல்லவி

கயிலை நாதனை கல்யாண சுந்தரனை

மயிலாடும் மணஞ்சேரி ப்பதிதன்னில் துதித்தேன்

 அனுபல்லவி

 குயிலின் குரலுடைய யாழினும் மென்மொழியாள்

 ஒயிலாக ஒருபாகம் உடனிருந்து போற்றும்

 சரணம்

 அயிலாரும் அம்பெறிந்து முப்புரமெரித்தவனை

 துயிலும் பாற்கடலோன் கேசவன் நேசனை

 சயிலேந்திரன் மகளை மணம் செய்த ஈசனை

 பயில்வோருக்கு பவபயம் பாவங்களில்லை






Monday, 26 May 2014

வேலன்





வேலன் 


பல்லவி 

பாடாமலிருப்பேனோ   வேலனவன் புகழை  

தேடாமலிருப்பெனோ தேவனவன் தாளை 

அனுபல்லவி 

நாடாமலிருப்பேனோ  ஆடவல்லான் மகனை 

கூடாரை வெல்லும் குமாரனவனருளை

சரணம் 

 கோடானுகோடி   தவம் செய்யும் முனிவர்களும் 

 நாடாளுமிந்திரரும் நான்முகனும் நான்மறையும் 

 தாடாளன் கேசவனும் ஈசனும் பணிந்தேத்தும் 

 வாடாமலர் சூடும் வள்ளி மணாளனை  





மனஇருள்



மனஇருள்


சத்தம் கேட்டு வாயிலைத் திறந்தான்

யாருமில்லை வெளிச்சம் மட்டுமே

உள்ளே இருட்டு வெளியே வெளிச்சம்

தட்டியது மனிதனோ? தேவனோ ?

இருட்டை விரட்டி வெளிச்சம் அளித்ததால்

யாராயிருப்பினும் நன்றியே

என்றான் !!















உமையொருபாகன்



உமையொருபாகன்

பல்லவி

சிவனருள் வேண்டியே அவனடி பணிந்தேன்

தவயோக முனிவரும் ஞானியரும் போற்றும்

அனுபல்லவி

நவக்கிரகங்களும் நந்தியும் கணங்களும்

அவனியோரனைவரும் அமரரும் பெறவிரும்பும்

சரணம்

உவகையுடனே பணிந்திடும் பக்தருக்கு

பவப்பிணி கவலை யனைத்தையும் போக்கிடும்

சிவகாமேச்வரன் கேசவன் நேசன்

புவனம் புகழ்ந்தேத்தும் உமையொருபாகன்





.

Sunday, 25 May 2014

சிந்தூர கணபதி




சிந்தூர  கணபதி

பல்லவி

சிந்தூர வண்ண மகாகணபதியை

தந்தி முகத்தோனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

இந்தின் இளம்பிறை சூடிய கரிமுகனை

உந்தி கமலன் கேசவன் மருகனை

சரணம்

 செந்தில் நாதன் அறுமுகன் சோதரனை

 இந்திரன் மகளை மணம் புரிந்தவனை

  வந்தனை புரிந்திடும் அடியார்க்கருள் பவனை

 அந்தமுமாதியும் இல்லாதவனை 

Saturday, 24 May 2014

சிலேடை !!


            உவமை

      மின்னும் கண்ணும் மிளிரும் அழகும்

       புன்சிரிப்பும் பூமுகமும்

       விடமிருக்கும் தலையும்

       பிளவுடைய நாக்கும்

       வளைவுகளின்  வசீகரமும்

        நெளிந்து செல்லும் லாவகமும்

         பளிங்கின் வழவழப்பும்

         பெண்ணும் பாம்பும்

          ஒன்றென்றே  சொல்!!

           

         

       

       

     

சூரிய நாராயணன்




.." ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே .. பாஸ அஸ்தாய தீமஹி 
.. தந்நோ சூர்ய ப்ரசோதயாத் ".. 

சூரிய நாராயணன் 

பல்லவி 

உதிக்கின்ற கதிரவனை மதித்துத் துதித்தேன் 

குதிரைக்கொடியோனை மதிக்கொளி கொடுப்பவனை 

அனுபல்லவி 

புதிய நாள் தொடங்கும் உதய சூரியனை 

துதித்திடுமடியார்க்கு நிதியளிப்பவனை 

சரணம் 

விதிக்கும் மதிக்கும் அதிபதியானவனை 

இதிகாசபு ராணங்கள் வேதங்கள் 

மதித்திடும்  ஆதவனைக்  கேசவனை நாரணனை  

அதிசயம் நிறைந்தவனை கோள்களின் தலைவனை 

துரிதம் 

சுரபதி ரதிபதி கணங்களின் அதிபதி 
தேவசேனாபதி பசுபதி மற்றும் 
சரஸ்வதியின்பதி தனங்களினதிபதி 
எதிர்நின்று துதித்திடும் ஆதித்தியனை 
































சிவகணபதி





சிவகணபதி

பல்லவி

கரும்பும் முக்கனியும் விரும்பும் கரிமுகனை

அருள் தரும் சிவன் மகனை  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

கருநிற வண்ணன் கேசவன் மருகனை

பருத்த வயிறுடைய ஆனைமுகத்தோனை

சரணம்

முருகனும் கணங்களும் நந்தியும் முனிவரும்

பிரமனும் இந்திரனும் அமரரும் வணங்கிடும்

கருணா மூர்த்தியை  மகாகணபதியை

ஒரு குறையும் அணுகாமலெனைக் காக்க வேண்டுமென


Friday, 23 May 2014

ஸ்ரீ பால விநாயகன்



ஸ்ரீ பால விநாயகன்

பல்லவி

பாலவினாயகனை  சிவன்மகனை

வேலவன் மூத்தோனை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

நீலநிறத் தழகன்  கேசவன் மருகனை

ஞாலம்  போற்றும் ஆனை முகத்தோனை

சரணம்

லீலைகள் பல புரிந்த வேழ முகத்தானை

காலனும் நந்தியும் கணங்களும்  முனிவர்களும்

மேலுலகத்திந்திரனும் தேவர்களும் வணங்கிடும்

கோல மிகு  கரிமுகனை தேவாதி தேவனை

மூலாதார மூர்த்தி



மூலாதார மூர்த்தி


பல்லவி

மூலாதார மூர்த்தியை கணபதியை

நீலாயதாட்சியின் மகனைப்  பணிந்தேன்

அனுபல்லவி

வேலாயுதனின் சோதரனைக் கரிமுகனை

பாலாழியில் உறங்கும் கேசவன் மருகனை

சரணம்

ஆலால கண்டன் பரமேஸ்வரன் மகனை

பூலோகம் மேலுலகமனைத்தும் போற்றும்

பால விநாயகனை ஆனைமுகத்தோனை

கோலாகலமாக திருவாரூர் தனில் விளங்கும்


Thursday, 22 May 2014

ஓம் கார கணபதி




ஓம் கார கணபதி 

பல்லவி 

ஓங்காரமாய் விளங்கும் மகா கணபதியை 

சாங்கியங்கள் செய்து மனமாரத் துதித்தேன் 

அனுபல்லவி 

தேங்காய் வெற்றிலை பாக்கு பழமும் படைத்து 

தீங்கின்றி யவன் நாமம் நாவார உரைத்து 

சரணம் 

நீங்காதெப்போதும் உடனிருக்கும் திருமகளை 

தாங்கும் திருமார்பன் கேசவன் மருகனை 

ஓங்கு புகழ் கணபதி அக்கிரகாரம் தனில் 

பாங்குடனே வீற்றிருந்து பக்தருக்கு காட்சிதரும் 

ஆனைமுகன்





ஆனைமுகன்


பல்லவி


பூரணம் பொதிந்த மோதகக் கையனை

வாரண முகனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

ஆரணப் பொருளை  அனைத்துக்கும் முதலை

மாறனையீன்ற  கேசவன் மருகனை

சரணம்

 சூரனை வதைத்த  குமரனின் சோதரனை

காரமர் மேனியனை க்கருணா மூர்த்தியை

கோரின வர தரும் ஆனை முகத்தோனை

பாரனைத்தும் போற்றும்   பார்வதி மைந்தனை
     

Wednesday, 21 May 2014

வேல்நெடுங்கண்ணி மகன்





வேல்நெடுங்கண்ணி மகன்


பல்லவி

பாலில் முழுக்காடும் மகாகணபதியின்

காலில் விழுந்து மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

நால்வகை வேதங்கள் போற்றும் கரிமுகன்

வேல்நெடுங்கண்ணியின் அன்புச் செல்வன்

சரணம்

ஆலிலை துயிலும் கேசவன் மருகன்

 சேல்விழியாள் குறவள்ளி மணாளன்

வேல்முருகன் தமையன் விக்ன விநாயகன்

மேலுலகும் பூவுலகும் கரம்பணி ந்தேத்தும்

நல்லூர் சிவன்





நல்லூர் சிவன்

பல்லவி

 கல்யாண சுந்தரனைக் கண் கவரழகனை
 நல்லூர் சிவனை மனமாரத்துதித்தேன்


துரிதம் 

நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும் 
இந்த்ரனும் பிரமனும் கரம் பணிந்தேத்தும் 


அனுபல்லவி

மெல்லிடையாள் கிரி சுந்தரியின் மனங்கவர்
மல்லீச்வரனை மாதொருபாகனை

சரணம்

பொல்லாதவரை இல்லாதொழித்திடும்
வல்லானை சடையானை நல்லோர்க்கருள் பவனை 
புல்லாங்குழலூதும் கேசவன் நேசனை
எல்லா நலன்களும் எனக்கருள வேண்டுமென

முக்கண்ணன் மகன்



முக்கண்ணன் மகன்

பல்லவி
முக்கனி அப்பம் அவல் பொரி படைத்து
முக்கண்ணன் மகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சக்கரக் கையன் கேசவன் மருகனை
சிக்கில் சிங்கார வேலன் தமையனை
சரணம்
அக்கறையுடனே பணிந்திடுமடியார்க்கு
எக்குறையும் அணுகாமல் செய்திடும் கரிமுகனை
விக்ன விநாயகனை  வேழமுகத்தோனை
நெக்குருகி நினைந்து அருள் தர வேண்டினேன் 

Tuesday, 20 May 2014

கற்பக விநாயகன்



கற்பக விநாயகன்
பல்லவி
கற்பகவினாயகனை கற்பகாம்பிகை மகனை 
நற்கதி பெற வேண்டி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பொற்பதம் பணிந்திடும் பக்தருக்கெல்லாம்
அற்புத தரிசனம் அளித்திடும் கரிமுகனை
சரணம்
முற்பகல் செய்த பழவினைப் பயன்களை
அற்பமாய் செய்திடும் ஆனைமுகத்தோனை
பற்பலரும் போற்றும் பானை வயிற்றோனை
பற்பநாபன் கேசவன் மருகனை 

Monday, 19 May 2014

ஈசன் மகன்



 ஈசன் மகன்

 பல்லவி

பாசாங்குசமும் மோதகமும் கையிலேந்தும்

ஈசன் மகனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

ஆசாபாசத் தளைகளைக்களைந்திடும்

கேசவன் நேசனை மகாகணபதியை

சரணம்

தேசுடையவனை தீனருக்கருள்பவனை

மாசிலா மணியை மதியணிந்தவனை

நீசன் ஆனைமுக அரக்கனையழித்தவனை

காசினி புகழ்ந்தேத்தும் வாரணமுகனை 



Sunday, 18 May 2014

புதிய கணபதி


புதிய கணபதி 

பல்லவி 

கதி நீயே  கணபதி  உனையே துதித்தேன் 

மதியணிந்தவனே  எனக்கருள் புரிவாய் 

அனுபல்லவி 

புதிய தோற்றத்தில் பொலிவுடன் காட்சி தரும் 

அதிசய ஆனை முகத்தோனே ஐங்கரனே 

சரணம் 

கதிரவனைபழிக்கும் காந்தியுடையவனே 

சதுர் மறை போற்றும் கேசவன் மருகனே 

முதன்மைக்கடவுளே மோதகப்பிரியனே 

கதிர்வேலன் சோதரனே கருணாநிதியே 





















ஸ்ரீ வெள்ளை விநாயகர் (திண்டுக்கல்)


ஸ்ரீ வெள்ளை விநாயகர் (திண்டுக்கல்)

பல்லவி 

வெள்ளை விநாயகனை உள்ளன்புடன் துதித்தேன் 

அள்ளக்குறையாத கருணை மழை பொழியும் 

அனுபல்லவி 

 கள்ளழகன் சென்ன கேசவன் மருகனை 

பிள்ளையாரை வேழமுகத்தோனை 

சரணம் 

உள்ளத்தில் வைத்து துதித்திடுமடியார்க்கு 

கொள்ளை நலன்கள் அளித்திடும் கரிமுகனை 

முள்ளென உறுத்தும் முன்வினைப்பயன்களை 

கிள்ளியெரிந்திடும் அருள் பெற வேண்டி 

















கோவிந்தன்


கோவிந்தன் 

பல்லவி 


கோவிந்தா  கோவிந்தா  என்றழைத்தேனே 

குரல் கேட்டு ஓடிவர மனமில்லையா 

அனுபல்லவி 

தேவியரிருவரும்  மேவிடும் கேசவனே 

மூவடியாலுலகளந்த வாமனனே மாதவனே 

சரணம் 

கூவியழைத்தக்  கரிக்கபயம் தந்தவனே  

காவல் தந்தபலை மானம் காத்தவனே  

சேவடி பணிந்து தினமுனைத் தொழுதிடும் 

பாவியேன் என்மீது பாராமுகம் ஏனோ 






Saturday, 17 May 2014

சுவாமிநாதன்


சுவாமிநாதன் 

பல்லவி 

தந்தைக்கு மந்திரமோதிய தனயனை 

சுவாமிநாதனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

 சிந்தை கவர்ந்திடும்  சிங்கார வேலனை 

நந்தகுமாரன்  கேசவன் மருகனை 

சரணம் 

இந்திரன் நரர்சுரர் நான்முகன் முனிவர்கள் 

சந்திரன் முதலிய கோள்களனைத்தும் 

வந்தனை புரிந்திடும் செந்தில் நாதனை 

கந்தனை சுந்தரனை கார்த்திகேயனை 






வரதராஜன்



வரதராஜன்

பல்லவி

வரம் தரும் வரதராஜனைக் கேசவனை

நிரந்தரமானவனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

கரங்களில் சக்கரமும் கதையும் சாரங்கமும்

ஏந்தும் திருமாலை திருவரங்கநாதனை

சரணம்

அரனயனும் நாரதரும்  சுகசனகாதியரும் 

நரர்சுரரிந்திரனும் சரஸ்வதியும்  பார்வதியும்

கரம் பணிந்தேத்தும் பரமபத நாதனை

 சரணம் சரணமெனத் திருவடி பணிந்து



ஆலவாயழகன்


ஆலவாயழகன் 

பல்லவி 

சங்கரனை ஈச்வரனை ஆலவாயழகனை 

பொங்கரவணிந்தவனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

 அங்கையற் கண்ணியின்  மனம் மகிழச்செய்திடும் 

திங்கள் பிறையணிந்த சொக்கநாதனை 

சரணம் 

 முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட 

எங்களுக்குதவிடும் கேசவன் நேசனை 

எங்கும் நிறைந்திருக்கும் மகாதேவனை 

மங்காதபுகழ் மேவும் மதுரைமாநகர் வளர் 






கரிமுகன்


கரிமுகன் 

பல்லவி 

கரிமுகனை கணபதியை மனமாரத்துதித்தேன் 

பரிவுடன் எனையே காத்தருள வேண்டுமென 

அனுபல்லவி 

விரிகமலமலரமர்  பிரமனும் அமரரும் 

அரி அரனும் நந்தியும் கணங்களும் வணங்கிடும் 

சரணம் 

பரிதியின் ஒளியினும் ஒளிமிகு சுமுகனை 

திரிபுரமெரித்த பரமசிவன் மகனை 

கரியநிறத்தினன்  கேசவன் மருகனை 

சரிநிகர் சமானமில்லாத தேவனை 






Friday, 16 May 2014

உமையொருபாகன்

   .


உமையொருபாகன் 

பல்லவி 

நமச்சிவாயனைப் பரமேச்வரனை 

உமையொருபாகனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

இமவான் மகளை மணம்புரிந்தவனை 

உமாமகேஸ்வரனைக்  கையிலைநாதனை 

சரணம் 

நமனையழித்த காலாந்தகனை 

அமரர் முனிவர் பணி அருணாசலனை 

கமலநாபன் கேசவன் நேசனை 

இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதிருப்பவனை 









சிரிப்பு 2



சிரிப்பு 2

                                  அறிவாளி 1;       அண்ணே இந்த பஸ்சை  பின்னால தள்ள முடியுமா?

அறிவாளி 2:    ம் ஹும் தள்ள முடியாது ! 

அறிவாளி 1:  ஏன் ணே ?


*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

அறிவாளி 2: ஏன்னா  பின் வளைஞ்சிடும்!!!!!!!!
(அண்ணன் சுப்பையா மணிவண்ணன் அவர்களுக்கு சமர்ப்பணம் )


மகமாயி


மகமாயி 

Namastestu Mahamaye Sripithe Surapujite
Shangha Chakra Gadahaste Mahalakshmi Namostute

பல்லவி 

திருச்சக்கரம்தனில் வீற்றிருப்பவளை 

திருமகளை அலைமகளை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

திருக்கரத்தில் சங்கும் சக்கரமும் கதையும் 

பெருமையுடன் வைத்திருக்கும் மகாலக்ஷ்மியை 

சரணம் 

திருமாலும் பிரமனும் நமச்சிவாயனும் 

குரு நாரதரும் இந்திரனும் முனிவரும் 

சரச்வதியும் பார்வதியும் நரர்சுரரனைவரும் 

கரம் பணிந்தேத்தும் மகாமாயையை 


கள்ளழகன்



 கள்ளழகன்

  பல்லவி

மாலிருஞ்சோலைத்திருமாலைக்கேசவனை

கள்ளழகனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

ஆலிலைபாலனாயவதரித்தவனை

நால்வகை வேதங்கள் போற்றும் நாராயணனை

சரணம்

ஞாலமுண்ட வாயனை வேலனின் மாமனை

காலாந்தகனும் பிரமனும் பணிந்திடும்

மூலிகையாயென் பிறவிப்பிணி தீர்க்கும்

பூலோகம் போற்றும் நீலவண்ணனை
























Thursday, 15 May 2014

சுகவனேச்வரன் மகன்

.



சுகவனேச்வரன் மகன் 

பல்லவி 

சுகவனேச்வரன் மகனைக் கரிமுகனை 

அகம் குளிரக்கண்டு மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

இகபரமிரன்டிலும் சுகமளிப்பவனை 

குகசோதரனைக் கேசவன் மருகனை  

சரணம் 

பகலவன் ஒளியினும்  தேசுடையவனை 

நிகர் தனக்கில்லாத தேவாதி தேவனை 

சகலரும் வணங்கிடும் ஆனைமுகத்தோனை 

புகலிடம் நீயென மலர்ப்பதம் பணிந்து